×

இலங்கைக்கு படகில் கடத்திய ரூ. 400 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள காலே துறைமுகம் மேற்கு கடல் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை புலனாய்வு பிரிவுக்கு கடந்த 22ம் தேதி தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இலங்கை கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பலில் சென்ற படையினர், காலே துறைமுகத்தில் இருந்து, 91 நாட்டிக்கல் மைல் தொலைவில் மாத்தறை அருகில், தொன்ட்ரா கடல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது தொன்ட்ரா மீன்பிடி துறைமுக கடலில் நின்றிருந்த படகை சோதனை செய்தனர். இதில் தமிழகத்தில் இருந்து சென்ற படகின் அடிப்பகுதியில் 160 பார்சல்களில் 180 கிலோ ஹெராயின் பவுடர் மற்றும் 28 பார்சலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 400 கோடி. இதுதொடர்பாக இலங்கை தொன்ட்ரா மற்றும் கொட்டேகொடா பகுதியைச் சேர்ந்த நபர்கள் சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

The post இலங்கைக்கு படகில் கடத்திய ரூ. 400 கோடி போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rameswaram ,Sri Lankan Investigation Division ,Kale port ,Dinakaran ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்